தொடர்வண்டி கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை கைவிட வேண்டும்…


தொடர்வண்டி கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்!

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்வண்டித்துறையின் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், அதை சமாளிக்கும் வகையில்  பயணிகள் கட்டணத்தை உயர்த்த இந்திய தொடர்வண்டி வாரியம் திட்டமிட்டிருக்கிறது. தொடர்வண்டித் துறை உத்தேசித்துள்ள கட்டண உயர்வு கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு அதிகம் என்பதால், அது ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தொடர்வண்டிகளில் பயணிக்க முடியாத நிலையை ஏற்படுத்திவிடும்.

பொருளாதார மந்தநிலை காரணமாக தொடர்வண்டித்துறையின் சரக்குப்போக்குவரத்து வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தொடர்வண்டித்துறையின் செலவுகள் அதிகரித்துள்ளன. தொடர்வண்டித்துறையில் 12 லட்சம் பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், 13 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டியுள்ளது. இதற்காக அரசிடமிருந்து கிடைக்கும் உதவி போதுமானதாக இல்லை என்பதால், நிலைமை சமாளிக்க பயணிகள் கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு தொடர்வண்டி வாரியம் வந்திருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

கடந்த காலங்களில் தொடர்வண்டி கட்டண உயர்வு சமாளிக்கக்கூடிய வகையில் இருந்தது. ஆனால்,  இப்போது அனைத்து வகுப்புகளின் பயணிகள் கட்டணத்தையும் கிலோமீட்டருக்கு 40 பைசா வீதம் உயர்த்த தொடர்வண்டி வாரியம் திட்டமிட்டிருக்கிறது. இது நினைத்துப் பார்க்க முடியாத அளவு ஆகும்.

உதாரணமாக, சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு 653 கிலோ மீட்டர் ஆகும். இதற்கு அடிப்படைக் கட்டணமாக 335 ரூபாயும், முன்பதிவுக்கட்டணம், விரைவு வண்டிக்கான கட்டணம் ஆகியவற்றுக்காக 50 ரூபாயும் சேர்த்து மொத்தம் 385 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. பேருந்து கட்டணத்துடன் ஒப்பிடும்போது  இது மிகவும் குறைவு ஆகும். அதனால் தான் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பேருந்துகளை தவிர்த்து விட்டு தொடர்வண்டிகளில் பயணிக்கின்றனர். இது தான் தொடர்வண்டித்துறை வெற்றிக்கு காரணமாகும்.

தொடர்வண்டி வாரியம் திட்டமிட்டுள்ளவாறு கிலோ மீட்டருக்கு 40 பைசா உயர்த்தப்பட்டால் சென்னை & திருநெல்வேலி இடையிலான அடிப்படைக் கட்டணம் 594 ரூபாயாகவும், பிற கட்டணங்களையும் சேர்த்து 644 ஆகவும் அதிகரிக்கும். இது 77 விழுக்காடு உயர்வு ஆகும். இந்த கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தால், அது பேருந்து கட்டணத்தை விட மிகவும் அதிகமாக இருக்கும். இவ்வளவு அதிக கட்டணம் செலுத்தி தொடர்வண்டியில் பயணிக்க ஏழை, நடுத்தர மக்கள் முன்வர மாட்டார்கள்.  இது தொடர்வண்டித்துறையின் வளர்ச்சிக்கு வழிவகுப்பதைத் தவிர வீழ்ச்சிக்குத் தான் வழிவகுக்கும்.

பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் மத்திய தொடர்வண்டித்துறை இணை அமைச்சர்களாக இருந்த காலங்கள் உள்ளிட்ட 11 ஆண்டுகளில், அதாவது 2002 முதல் 2012 வரையிலான காலத்தில்  பயணிகள் கட்டணம் ஒரு பைசா கூட உயர்த்தப்படவில்லை. மாறாக, ஒரு முறை தொடர்வண்டிக் கட்டணம் அடையாளமாக குறைக்கப்பட்டது. ஆனால், அதற்குப் பிந்தைய 7 ஆண்டுகளில் தொடர்வண்டி கட்டணம் 4 முறை உயர்த்தப்பட்டிருக்கிறது. 4 முறைகளிலும் சேர்த்து எந்த அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டதோ, அதே அளவுக்கு கட்டண உயர்வை ஒரே முறையில் நடைமுறைப்படுத்த முயல்வது  எந்த வகையிலும் நியாயமல்ல. இது ஏழைகளிடமிருந்து தொடர்வண்டிகளை விலக்கி வைத்து விடும்.

தொடர்வண்டித்துறை என்பது மக்களுக்கு சேவை வழங்கும் துறையாகும். இதில் லாப நோக்கத்தைப் பார்க்கக்கூடாது. தொடர்வண்டிகளின் இயக்கச் செலவுகளுக்கும், அத்துறையின் வருவாய்க்கும் இடையில் பெரிய வித்தியாசம் இல்லை. தொடர்வண்டித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற 13 லட்சம் ஊழியர்களின் ஓய்வூதியத்திற்காக செலவழிக்கப்படும் தொகை தான் அத்துறையின் இழப்புக்கு முக்கியக் காரணமாகும். மத்திய அரசின் பெரும்பன்மையான துறைகளின் இன்றைய நிலை இதுதான். ஆனாலும், அத்தகைய துறைகள் மக்களுக்கு நேரடியாக சேவை வழங்குவதால் அந்த இழப்பை மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறது.

அதேபோல், தொடர்வண்டித்துறையின் ஓய்வூதிய சுமையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன்மூலம் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் வாகனமாக தொடர்வண்டிகளின் பயணக் கட்டணம்  உயர்த்தப்படாமல், இப்போதுள்ள நிலையிலேயே தொடருவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Source link

ISRO முன்னாள் விஞ்ஞானி நம்பி நரியானனுக்கு ரூ.1.3 கோடி இழப்பீடு!


ISRO முன்னாள் விஞ்ஞானி S நம்பி நரியானனுக்கு ரூ.1.3 கோடி இழப்பீடு வழங்க கேரள அமைச்சரவை கொள்கை ரீதியான ஒப்புதல் அளித்தது!

சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதை எதிர்த்து திருவனந்தபுரம் துணை நீதிமன்றத்தில் நம்பி நரியானன் தாக்கல் செய்த வழக்கைத் தீர்ப்பதற்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின்(ISRO) முன்னாள் விஞ்ஞானி S நம்பி நரியானனுக்கு ரூ.1.3 கோடி இழப்பீடு வழங்க கேரள அமைச்சரவை கொள்கை ரீதியான ஒப்புதல் அளித்தது.

இஸ்ரோவில் அறிவியல் விஞ்ஞானியாக பணி புரிந்தவர் கேரளாவைச் சேர்ந்த நம்பி நாராயணன். கடந்த1994-ஆம் ஆண்டு வேறு நாட்டிற்கு தகவல் கொடுத்ததாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட இவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு கடந்த 1996-ஆம் ஆண்டு CBI விசாரணைக்கு மாற்றப்பட்டது. கடைசியாக 1998-ஆம் ஆண்டு இவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விடுதலை செய்தது. 

சமீபத்தில் நம்பி நாராயணனின் வழக்கு முடிவுக்கு வந்த நிலையில் அதில் வெற்றி பெற்ற நம்பி நாராயணனுக்கு 50 லட்சம் நஷ்ட ஈடும் வழங்கப்பட்டது. 

கேரள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நாராயணன் உச்ச நீதிமன்றத்தை அணுகியிருந்தார். குறித்து இந்த கேரளா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு CBI விசாரணையின் போது விஞ்ஞானியின் தேவையற்ற கைத்துக்கு காரணமானவர்கள் என குறிப்பிடப்பட்ட முன்னாள் DGP மற்றும் ஓய்வுபெற்ற இரண்டு காவல்துறை சூப்பிரண்டுகள் KK ஜோசுவா மற்றும் S விஜயன் ஆகியோருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க தேவையில்லை என்று கூறியது.

முன்னதாக 1998-ஆம் ஆண்டில், உளவு வழக்கில் விடுவிக்கப்பட்ட நாராயணன் மற்றும் பிறருக்கு உச்ச நீதிமன்றம் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கியது, அந்த தொகையை செலுத்த மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

நம்பி நாராயணன் பின்னர் NHRCயை அணுகினார், அவர் அனுபவித்த மன வேதனை மற்றும் சித்திரவதைக்கு மாநில அரசிடம் இழப்பீடு கோரியுள்ளார். இரு தரப்பினரையும் கேட்டபின், முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிக்கு மார்ச் 2001-ல் NHRC ரூ.10 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Source link

வெங்காயத்தின் விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக தகவல்!


இந்தியாவில் வெங்காயத்தின் விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

கடந்த நான்கு மாதங்களாக வெங்காயத்தின் விலை விண்ணை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது. ஒரு கிலோ வெங்காயத்தினை ரூ.100-க்கு வாங்குவது தற்போது அனைவருக்கும் பொதுவான ஒன்றாக மாறிவிட்டது. இவ்வளவு நாட்கள் கழிந்த பிறகும், வெங்காயத்தின் விலை குறைவது போல் தெரியவில்லை.

வெளிநாட்டு வெங்காயத்தின் வருகையால் விலை உயர்வு தடைப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது இந்த வழியும் நமக்கு இருண்ட வழினையே காட்டுகிறது. காரணம் துருக்கி வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளது.

உலகில் வெங்காயத்தின் முக்கிய உற்பத்தியாளர் துருக்கி என கூறப்படுகிறது. இந்தியாவில் தேவைக்காக துருக்கியை எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது துருக்கியில் கொண்டுவந்திருக்கும் தடை, இந்தியாவின் வெங்காய தேவை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அதே நேரத்தில், நாட்டின் மிகப்பெரிய வெங்காயம் உற்பத்தி செய்யும் மாநிலமான மகாராஷ்டிராவில், பருவமழை காரணாம வெங்காய உற்பத்தி குறையலாம் என கனிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெங்காயத்தின் விலை மீண்டும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழக்கிழமை, நாட்டின் தலைநகர் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெங்காயத்தின் சில்லறை விலை கிலோவுக்கு ரூ.100-140-ஆக இருந்தது. இருப்பினும், மத்திய நுகர்வோர் விவகார அமைச்சின் இணையதளத்தில் கொடுக்கப்பட்ட விலை பட்டியலின்படி, டெல்லியில் வெங்காயத்தின் சில்லறை விலை கிலோ ஒன்றுக்கு ரூ.107 ஆகும்.

அமைச்சின் வலைத்தளத்தின்படி, நாடு முழுவதும் வெங்காயத்தின் சில்லறை விலை வியாழக்கிழமை ஒரு கிலோவுக்கு ரூ.48-150-ஆக இருந்தது. செய்தி நிறுவனமான IANS படி, டெல்லியின் ஆசாத்பூர் மண்டி விவசாய உற்பத்தி சந்தைப்படுத்தல் குழுவின் (APMC) விகித பட்டியலின்படி, டெல்லியில் வெங்காயத்தின் மொத்த விலை வியாழக்கிழமை ஒரு கிலோவுக்கு ரூ.20-95-ஆக இருந்தது, அதே நேரத்தில் வருகை 1020.3 டன்னாக பதிவாகியுள்ளது.

Source link

5 மாதங்களுக்கு பின்னர் கார்கிலில் மீண்டும் இணைய சேவை…


ஜம்மு காஷ்மீரில் இயல்புநிலை திரும்புவதற்கான அறிகுறிகளில், கார்கில் இணைய தடை இன்று ஐந்து மாதங்களுக்குப் பிறகு நீக்கப்பட்டுள்ளது!

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின்னர் ஏற்பட்ட கடுமையான ஆர்ப்பாட்டங்கள் காரணமாக , சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை நிலைநாட்ட இணைய சேவை தடைசெய்யப்பட்டது. 

இந்நிலையில் தற்போது இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்ட 145 நாட்களுக்குப் பிறகு மீட்டமைக்கப்பட்டுள்ளது. இணைய சேவை மீட்டமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது உள்ளூர்வாசிகள் பெருமூச்சு விட்டுள்ளனர். 

இப்பிரதேசங்களில் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் இணைய சேவைகளை மீட்டெடுக்க மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்தனர், எனினும் பொதுமக்கள் எந்தவிதமான சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடுவதைத் தவிர்க்க பிராந்தியத்தில் இணைய சேவை தொடர்ந்து தடை செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது இணைய சேவை மீண்டும் அளிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து கார்கிலில் வசிக்கும் ஜியா தெரிவிக்கையில்., “இன்று காலை முதல் 4G மொபைல் இணைய சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. குடியிருப்பாளர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள், சுற்றுலா தொடர்பான வேலைகள் உள்ளவர்கள் இப்போது நிம்மதியடைவார்கள்” என தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஸ்ரீநகரில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ் தெரிவிக்கையில், தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை விடுவிப்பது தொடர்ச்சியான செயல் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே பலர் விடுவிக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு மதிப்பீட்டின் அடிப்படையில் நிர்வாகம் அவ்வப்போது தகுந்த முடிவுகளை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக உற்துறை அமைச்சகம், செவ்வாய்க்கிழமை புதிதாக அமைக்கப்பட்ட யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் இருந்து 72 ஆயுதப்படைகளை திரும்பப் பெற்றது.

மத்திய ஆயுத பொலிஸ் படையில் மத்திய ரிசர்வ் பொலிஸ் படையின் (CRPF) 24 நிறுவனங்களும், எல்லை பாதுகாப்பு படை (BSF), இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் (ITBP), மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) மற்றும் சாஷாஸ்திரா சீமா பால் (SSB) ஆகிய 12 நிறுவனங்களும் அடங்கும். 

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு நிலையை மறுஆய்வு செய்வதற்காக நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தின் பின்னர் துருப்புக்களை நகர்த்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தில் கூட்டம் நடைபெற்றதுடன், பிராந்தியத்தை அமைதியாக வைத்திருக்க ஒரு வரைபடம் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

ராகுல் பாபாவுக்கு சவால்… எங்கு இருக்கிறது குடியுரிமை பறிக்கப்படும் என்று? அமித் ஷா


சிம்லா: உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) இன்று (வெள்ளிக்கிழமை) காங்கிரஸை கடுமையாக குறிவைத்து தாக்கி பேசினார். குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) குறித்து காங்கிரசும் (Congress) கட்சி வதந்திகளைப் பரப்புவதாக அமித் ஷா குற்றம் சாட்டினார்.

சிம்லாவில் நடைபெற்ற நிகழ்சியில் பேசிய உள்துறை அமைச்சர், “‘ராகுல் பாபாவுக்கு நான் சவால் விடுகிறேன். இந்தச் சட்டத்தில் எந்த இடத்தின் குடியுரிமையைப் பெறுவதற்கான ஆதாரம் இருந்தால், அதைக் காட்டுங்கள்” எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், “இந்தச் சட்டத்தில் எங்கும், சிறுபான்மையினரின் குடியுரிமையைப் பறிக்க எந்தவிதமான குறிப்பும் இல்லை என்று இன்று இந்த நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் கூற விரும்புகிறேன். பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த சிறுபான்மை சகோதரர்களுக்கு குடியுரிமை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

“1950-ல் ஒரு நேரு-லியாகத் ஒப்பந்தம் இருந்தது. அதன் கீழ் இரு நாடுகளும் தங்கள் சிறுபான்மையினரைப் பாதுகாக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் இது பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தானில் நடக்கவில்லை. சிறுபான்மையினர் அங்கு மதத்தின் அடிப்படையில் துன்புறுத்தப்பட்டார்கள். அவர்கள் அகதிகளாக வந்த அவர்களை யாரும் கவனித்துக் கொள்ளவில்லை. நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு குடியுரிமை வழங்க முன்முயற்சி எடுத்து குடியுரிமை திருத்தச் சட்டத்தை இயற்றினார்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Source link

உள்ளாட்சி தேர்தல்; தெரிந்துகொள்ள வேண்டிய சில தகவல்கள்…


தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிமன்ற தேர்தல் அமைதியான முறையில் தொடங்கியது. 

தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தலில்156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 2,546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 4 ஆயிரத்து 700 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 37 ஆயிரத்து 830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு போட்டியிடுபவர்களை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நடக்கிறது

இன்று நடைபெறும் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ஆம் தேதி தொடங்கி கடந்த 16-ஆம் தேதி நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியல் படி 2,31,890 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலில் 1.28 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1.4 லட்சத்துக்கும் மேற்ப்பட்ட வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தபடவுள்ளன.

தேர்தல் பாதுகாப்பு பணியில் காவலர்கள், ஆயுத படை காவலர்கள், ஊர்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட 63 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடியில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். மேலும் அந்த வாக்குச்சாவடியில் நடைபெறும் வாக்குப்பதிவு முழுவதுமாக வீடியோ பதிவு செய்ய மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவிற்குள் எந்த வேட்பாளரும் முகாம்களை அமைக்க கூடாது எனவும், ஒரே வளாகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குச்சாவடிகள் இருந்தால் ஒரு வேட்பாளர் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் பொதுவாக ஒரே ஒரு முகாம் மட்டும் 200 மீட்டருக்கு அப்பால் அமைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த முகாம்களில் தேவையில்லாமல் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். இந்த முகாம்களில் சுவரொட்டிகள், கொடிகள், சின்னங்கள் அல்லது வேறு பிற பிரசாரப் பொருட்கள் இல்லாமல் எளிமையாக இருக்க வேண்டும். முகாம்களில் தின்பண்டங்கள் வினியோகம் செய்யவோ, மக்கள் கூடுவதையோ அனுமதிக்க கூடாது. வாக்காளர்களுக்கு எந்தவகையிலும் லஞ்சம் அல்லது பரிசு பொருட்கள் வழங்க கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பலத்த கட்டுப்பாடுகளுக்கு இடையே நடத்தப்படும் இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் ஜனவரி 2-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 30-ஆம் தேதி நடத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Source link

தமிழகத்தில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன?தமிழகத்தில் இன்று (27.12.2019) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.Source link

இலங்கையில் உள்ள தமிழர்களை விலக்கிவைக்க முயற்சியா? -MKS


இலங்கையின் சுதந்திர தின விழாவில் இனி சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்று இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்!

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது., “இலங்கை அரசு தங்கள் சுதந்திர தின விழாவில் சிங்களத்தில் மட்டும் தேசிய கீதத்தை இசைக்க முடிவு செய்துள்ளதைக் கேட்டு ஏமாற்றமும் கவலையும் உண்டாகிறது.

இத்தகைய பெரும்பான்மைவாதம் இலங்கையில் உள்ள தமிழர்களை மேலும் விலக்கும்.

இந்த விவகாரத்தில் இந்தியாவின் பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கர் உடனடியாக தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இலங்கை சுதந்திர தின விழாவில் இனி தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாது எனவும், பழமொழிகள் கொண்ட இந்தியாவில் ஒருமொழியில் மட்டும் தேசிய கீதம் இசைப்பது போல் இனி இலங்கையிலும் ஒரு மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் என அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

இதுகுறித்து இலங்கை அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் கூறுகையில், இலங்கையின் சுதந்திர தினவிழாவில் இனி தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாது, சிங்கள மொழியில் மட்டுமே இசைக்கப்படும். இந்தியாவில் பல மொழிகள் இருக்கின்றன. என்றபோதிலும் ஒரே மொழியிலேயே தேசிய கீதம் பாடப்படுகிறது. அதுபோல இலங்கையில் இனி ஒரு மொழியில் மட்டுமே தேசியகீதம் இசைக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 72-வது சுதந்திர தினம் 2020 பிப்ரவரி 4-ஆம் தேதி கொண்டடப்பட இருக்கும் நிலையில் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொழும்பு சுதந்திர தின சதுக்கத்தில் நடைபெறும் இந்த விழா குறித்து நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

1948-ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் முதல் சுதந்திர தின நிகழ்வானது கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது. அதன் பின்னர் மீண்டும் தற்போது 72-வது சுதந்திரம் தினம் அதே இடத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் முதலாவது சுதந்திர தினத்தில் தமிழ் மற்றும் சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. எனினும் பின்னர் ஏற்பட்ட அரசியல் பிரச்சினைகள் காரணமாக சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்பட்டு வந்தன.

கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன ஆட்சியேற்றதன் பின்னர் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டடுவந்தது. இந்நிலையில் சமீபத்தில் நடைப்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்று, கோட்டாபய ஜனாதிபதியாக பொறுப்பேற்று இருக்கும் நிலையில், மீண்டும் தனிச் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக இலங்கையில் இடம்பெறும் பெயர் பலகைகள், இடையாள பதாகைகளில் தமிழ் மொழி அகற்றப்பட்டு சிங்கல மொழி புகுத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில் தற்போது தமிழ் மொழி தேசியகீதம் பொது நிகழ்வில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணாமாக இலங்கை தமிழர்கள் கடும் அதிர்ப்தியில் உள்ளனர்.

Source link

மோசமான அதிமுக அரசு – அதை தூக்கி நிறுத்தும் பாஜக -ஸ்டாலின் சாடல்!


மோசமான அதிமுக அரசுக்கும், அதை தூக்கி நிறுத்தும் பாஜக அரசுக்கும் இடையிலான உறவு, கூட்டணி நெருக்கம் குறித்து தமிழக மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது.,  “குடிப்பதற்கு எல்லோருக்கும் பாதுகாக்கப்பட்ட தண்ணீர் இல்லை” “பொதுமக்கள் நடப்பதற்கு நல்ல சாலை வசதிகள் இல்லை” “பெண்களுக்குத் தேவையான பாதுகாப்பு இல்லை” “ஊழல் கோட்டையில் உற்சாகமாக வாழும் அமைச்சர்கள்” என்று, தமிழக மக்கள் அதிமுகவின் பொல்லாத ஆட்சி வீசும் வெப்பத்தில் பொசுங்கி வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில், “மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதில் தமிழகம் முதல் இடம்” என்று மத்திய பா.ஜ.க அரசு தரவரிசைப் பட்டியல் வெளியிட்டிருப்பது, “கும்பி எரியுது, குடல் கருகுது, குளு குளு ஊட்டி ஒரு கேடா” என்பதைத்தான் நினைவுபடுத்துகிறது.

முதலில் மத்திய அரசின் இந்தத் தரவரிசைப் பட்டியல் ஏன் திடீரென்று வெளியிடப்பட்டுள்ளது? இந்தத் தர வரிசைப் பட்டியலுக்கு மத்திய அரசில் யார் ஒப்புதல் கொடுத்தது? பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையா? துறைகளின் கீழ் உள்ள அளவுகோல் குறித்த விவரங்களை அளித்தது யார் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாத, ஒரு “மர்ம ஆய்வறிக்கை” அம்பலத்திற்கு வந்திருக்கிறது.

ஆனால் உண்மை என்ன? “மூன்றாண்டு கால எடப்பாடி திரு.பழனிசாமியின் கேடுகெட்ட, மக்கள் விரோத, ஊழல் அரசுக்கு “நல்லாட்சி சாயம் பூசி” கூட்டணி தர்மத்தை நிலை நாட்டியிருக்கிறதோ மத்திய பா.ஜ.க. அரசு என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு, குறிப்பாக நடுநிலையாளர்களுக்கு எழுகிறது. ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட 9 துறைகளில் இரு துறைகளில் மட்டுமே “முதலிடத்தில் இருப்பதாக” உள்ள தர வரிசைப் பட்டியலில் எப்படி தமிழகம் முதலிடத்திற்கு வந்துள்ளதாக ஆய்வு கூறுகிறது? எந்தவித விளக்கமோ, விவரமோ இல்லை. ஆனால், அதிமுக அரசுக்கு அளித்துள்ள இந்த சான்றிதழால், மத்திய பா.ஜ.க. அரசு தமிழகத்தின் கேடு கெட்ட அதிமுக ஆட்சிக்கு ஜாமீன் கொடுக்கும் அமைப்பாக மாறியிருக்கிறது.

“நீதி நிர்வாகம் மற்றும் பொதுப் பாதுகாப்பில்” முதலிடம் என்று மத்திய அரசு கண்டுபிடித்திருக்கிறது. “பொள்ளாச்சியில் 250 பெண்களுக்கும் மேற்பட்டவர்கள் பாலியல் வன்கொடுமை” “ஸ்டெர்லைட் போராட்டத்தில் கொத்துக் கொத்தாக சுட்டு வீழ்த்தப்பட்ட கொடுமை”, “பெண்களின் பாதுகாப்பு” மட்டுமல்ல, “பெண் குழந்தைகள் பாலின வன்கொடுமையில் தமிழகம் இந்தியாவில் 2-ஆவது இடம்” என்று அடுக்கடுக்கான சட்டம்- ஒழுங்கு சீரழிவில் அவதிப்படும் மக்களுக்கு அதிமுக நல்லாட்சி வழங்கியுள்ளது என்று எப்படி மத்திய அரசு கண்டுபிடித்தது? “பொதுப் பாதுகாப்பு” ஆய்வு வரம்பிற்குள் குற்றங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்த எந்த “அளவுகோலும்” இல்லை. பிறகு எப்படி இந்த முடிவு அறிவிக்கப்பட்டது? அடுத்து “பொது உள்கட்டமைப்பில் தமிழகம் முதலிடம்” என்று கூறப்பட்டுள்ளது. அந்த ஆய்வு வரம்பிற்குள் சாலை, குடிநீர், கழிப்பிட வசதிகள் போன்றவை முக்கியமாக வருகின்றன. “தமிழகம்தான் உள்ளாட்சித் தேர்தலே மூன்று வருடங்கள் நடத்தாத ஒரே மாநிலம்” என்று மத்திய அமைச்சரே நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். அதனால் மாநிலத்திற்கு வர வேண்டிய உள்ளாட்சி நிதியை மத்திய அரசே நிறுத்தி வைத்துள்ளது. “சாலை, குடிநீர், கழிப்பிட” வசதிகளை அளிப்பதில் முக்கியப் பங்காற்றும் உள்ளாட்சி அமைப்புகளே இல்லாத போது எப்படி இந்த துறையில் தமிழகம் முதலிடத்திற்கு வந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது?

மேற்கண்ட இரு துறைகள் தவிர, மீதமுள்ள 7 துறைகளில் வேலை வாய்ப்பு, தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்டவற்றிற்கு மிக முக்கியமாகக் கருதப்படும் “வணிகம் மற்றும் தொழிற்சாலைகள்” பிரிவில் 14 ஆவது இடத்திற்குத் தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி நான்கு வருடம் முடிந்து விட்டது. அதிலும், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலமும், 5.85 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில், 402 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன என அறிவித்துள்ள அதிமுக ஆட்சியில் இதுவரை முதலீடுகளும் வரவில்லை; தொழிற்சாலைகளும் வரவில்லை. உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்ற பெயரில் இரண்டு மாநாடுகள் நடத்தியும், முதலமைச்சர் தொடங்கி மற்ற அமைச்சர்கள் வரை சாரை சாரையாக வெளிநாடு சென்றும், தொழில்துறையில் தமிழகம் 14- ஆவது இடம் என்பது இந்த ஆட்சிக்கு வெட்கமாக இல்லையா? “முதலிடம்” என்று தலைப்புச் செய்தி போடும் நாளேடுகளுக்கு, “தமிழகம் தொழில்துறையில் 14-ஆவது இடம்”, நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் “விவசாயத்துறையில்” தமிழ்நாடு 9-ஆவது இடம், ஏழை எளியவர்களின் நலனுக்கான “சமூக நலத்துறை”யில் தமிழகம் 7-ஆவது இடம், 4 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் சுமையைப் பெருக்கி,தொடர்ந்து நிதி மற்றும் வருவாய்ப் பற்றாக்குறையில் தமிழகம் தத்தளிப்பதால், “பொருளாதார மேலாண்மையில்” 5- ஆவது இடம் என்றெல்லாம் உண்மையான செய்திகளைப் போட ஏன் துணிச்சல் இல்லை? பத்திரிகைகளுக்கு என்ன அச்சுறுத்தல்? எங்கிருந்து அழுத்தம்? பாரபட்சமற்ற ஆய்வு ஒன்று, அரசியல் சாராத நடுநிலை அமைப்பினால், நிபுணர்களைக் கொண்டு, இன்றைக்கு நடத்தப்பட்டால்- முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி ஆட்சியில் தமிழகம் “கமிஷன், கரெப்ஷன், கலெக்ஷனில்” முதலிடம் பிடிக்கும். சட்டம் ஒழுங்கு சீரழிவில் முதல் இடத்தைப் பிடிக்கும்.

தொழில் வளர்ச்சியில் கடைசி இடத்திற்குத் தள்ளப்படும். வேலை இல்லாத் திண்டாட்டத்தில் முதலிடத்திற்கு வரும். “நல்லாட்சியில்” பூஜ்யத்திற்கும் கீழே ஏதாவது ஒரு “வரையறை” செய்ய முடியுமென்றால், அந்த இடத்திற்குச் சென்று விடும். இதுதான் இன்றைக்குத் தமிழகத்தில் உள்ள அதிமுக ஆட்சியின் அவலமான நிலைமை. “ஊராட்சி முதல் தலைமைச் செயலகம் வரை” “அமைச்சர்கள் தொடங்கி முதலமைச்சர் வரை” பலரும் லஞ்ச ஊழல் தடுப்புத்துறையின் ஊழல் வழக்கு விசாரணைகளிலும், சி.பி.ஐ. விசாரணையிலும் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். பதவியில் இருக்கும் முதலமைச்சரின் ஊழல் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உயர்நீதிமன்றமே உத்தரவிட்டது. வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப்பிரிவு ரெய்டுகள் அமைச்சர்கள் மீதும் – ஏன் தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைச் செயலாளரின் அலுவலகத்திலும் நடந்து விட்டது. ஆனாலும் “நல்லாட்சி” என்று- தரம் கெட்ட ஆட்சிக்கு ஒரு தர வரிசைப் பட்டியலை வெளியிட்டு- அதில் “முதலிடம்” என்று எடப்பாடி திரு பழனிசாமியின் ஊழல் ஆட்சிக்கு தர நிர்ணயம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசால் எப்படி முடிந்தது? வேறு எந்த ஒரு மத்திய அரசும் இப்படியொரு தர நிர்ணயப் பரிசோதனையில் அதிமுக ஆட்சியை ஈடுபடுத்தி- மத்திய அரசின் மீதான நம்பகத்தன்மையைக் கெடுத்து, தரம் தாழ்த்திக் கொள்ள முன்வந்திருக்காது என்றே எண்ணுகிறேன்.

மோசமான அதிமுக ஆட்சியைத் தூக்கி நிறுத்த, மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு முனைந்திருக்கிறது என்றால்- பா.ஜ.க. அரசுக்கும்- இங்குள்ள அதிமுக அரசுக்கும் “மத்திய-மாநில அரசுகளுக்கிடையேயான” உறவு என்பதையும் தாண்டி- ஏன், “கூட்டணி உறவுக்கும்” அப்பாற்பட்ட நெருக்கமான ஒரு உறவாக, “அதிமுக- பா.ஜ.க.” உறவு அமைந்திருக்கிறது என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. தங்களுக்குப் பயன்படாத தமிழகம் எப்படியோ சீரழியட்டும், அந்த மக்கள் எக்கேடோ கெட்டுப் போகட்டும் என்ற வஞ்சக நோக்கில், “அதிமுக அரசுக்கு நல்லாட்சி” சான்றிதழை மத்திய பா.ஜ.க. அரசு செயற்கையாக அளித்திருக்கிறது. இதைத் தமிழக மக்கள் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள்! தரவரிசைப் பின்னணியைப் பற்றி, தமிழக மக்களுக்கு எழுந்துள்ள அய்யப்பாடுகளைப் போக்கிட வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

Source link

9 வருடத்திற்கு பிறகு… உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவுதமிழகத்தில் நடைபெற்ற 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நிறைவடைந்தது.Source link