PAN – Aadhaar எண்ணை இணைக்க டிசம்பர் 31 கடைசி நாள்!


ஆதார் எண்ணை, பான் கார்டு எண்ணுடன் இணைக்க டிசம்பர் 31 ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண்ணை, பான் கார்டு எண்ணுடன் இணைக்க இன்னும் சில தினங்களே உள்ளது.  விரைவில் இரு எண்களையும் இணைத்து பல இன்னல்களிலிருந்து தப்பிக்க வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.

வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள், ஆதார் எண்ணை, பான் எண்ணோடு இணைக்காவிட்டால், பான் கார்டு செயலற்றதாகி விடுவதோடு மட்டுமல்லாது, வருமானவரி கணக்கு தாக்கல் உள்ளிட்ட நிகழ்வுகளை செய்ய முடியாத நிலை ஏற்படும்.

பணப்பரிவர்த்தனைகள் அனைத்தும் பான் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதால், ஆதார் எண்ணை, பான் எண்ணோடு இணைப்பதற்கு இதற்குமுன் இருமுறை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு விலக்கிக்கொள்ளப்பட்டது. 

இந்நிலையில், வரும் டிசம்பர் 31 ஆம் தேதி, இறுதி காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அவகாசத்திற்குள் இணைக்காவிட்டால், பான் கார்டு செயலற்றதாகிவிடும் என்று வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண்ணை, பான் எண்ணோடு இணைக்காதவர்கள், இந்த காலக்கெடுவிற்குள் இணைத்து தேவையற்ற பாதிப்பை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139AA(2), ஜூலை 1, 2017 நிலவரப்படி PAN வைத்திருக்கும், மற்றும் ஆதார் பெற தகுதியுடைய ஒவ்வொரு நபரும் தனது ஆதார் எண்ணை வரி அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறுகிறது. மேலும் உங்கள்  PAN, Aadhaar இன்னும் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால், உறுதிப்படுத்த I-T இணையதளத்தில் உள்ள இணைப்பு ஆதார் நிலை பக்கத்திற்கு சென்று தெரிந்துக்கொள்ளலாம். 

இந்தியாவின் தனித்துவமான அடையாள ஆணையத்தால் (UIDAI) ஆதார் வழங்கப்படுகிறது, மேலும் PAN என்பது ஒரு நபர், நிறுவனம் அல்லது நிறுவனத்திற்கு I-T துறையால் ஒதுக்கப்பட்ட 10 இலக்க எண்ணெழுத்து குறியீடு ஆகும்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது. 

Source link

ஜனவரி 15 ஆம் தேதி முதல் “ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம்”


“2020ம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி முதல் “ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம்” நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டு பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் வகையில் ‘ஒரு நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை மத்திய அரசு கொண்டு வருவதில் தொடர்ந்து முயற்சி வந்தது. இதன் மூலம் நாட்டின் எந்த பகுதியை சேர்ந்தவரும், எந்த பகுதியிலும் பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களை வாங்க முடியும்.

பயனாளர்கள் தங்களுக்குரிய உணவுப்பொருட்களை இந்தியா முழுவதும் உள்ள எந்தவொரு நியாயவிலை கடையிலும் ரேஷன் கார்டு மூலம் வாங்கி கொள்ளும் முறையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரின் ஆதார் அட்டையில் உள்ள பயோமெட்ரிக் அடையாளங்களை நியாயவிலை கடைகளில் உள்ள பி.ஓ.எஸ் கருவிகளுடன் இணைத்த பின்னர் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தபடும்.

நாட்டில் உள்ள ஒவ்வொரு ரேஷன் கடைகளும் ஆன்லைன் மூலம் இணைக்கப்படும். அதன்பிறகு அனைத்து ரேஷன் கடைகளிலும் பயோமெட்ரிக் (Electronic Point of Sale) அல்லது ஆதார் அடையாளம் (Aadhaar Authentication) அட்டை மூலம் கண்டறிந்து பயனாளிகளுக்கு பொருட்கள் வழங்கப்படும்.

இந்த முறை பெரும்பாலும் புலம்பெயர்ந்த பயனாளிகளான தொழிலாளர்கள், தினசரி கூலிகள், வேலை தேடி வேறு இடத்திற்கு செல்லுவோர்க்ளுக்கு பயனளிக்கும். அவர்கள் நாடு முழுவதும் உள்ள பிற காரணங்களுக்காகவோ தங்களின் இருப்பிடத்தை அடிக்கடி மாற்றிக் கொள்கிறார்கள் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்நிலையில் அடுத்த ஆண்டு (2020) ஜனவரி 15 ஆம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல் செயல்படுத்தப்படும் என்ற மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் முதல்கட்டமாக ஆந்திரா, தெலங்கானா, குஜராத், ஹரியானா, ராஜஸ்தான், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்களில் வரும் ஜனவரி 15 ஆம் தேதி அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Source link

இந்திய பெரு நகரங்களில் இன்று பெட்ரோல், டீசல் விலை என்ன?


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (28.12.2019) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

அரசாங்க எண்ணெய் நிறுவனங்கள், விலைகளை மதிப்பாய்வு செய்த பின்னர், ஒவ்வொரு நாளும் பெட்ரோல் மற்றும் டீசல் விகிதங்களை நிர்ணயிக்கின்றன. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் திருத்தப்பட்டு, தினசரி காலை 6 மணி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை வெளியிடுகின்றன.

பெட்ரோல், டீசல் விலைகளானது கடந்த ஜூன் 17, 2017 முதல் நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் நடைமுறை இந்தியாவில் கொண்டுவரப்பட்டது. இது ஒவ்வொரு வாரமும் பெட்ரோல், டீசல் விலையை மறுசீரமைக்கும் முந்தைய நடைமுறையிலிருந்து மாற்றம் செய்யப்பட்ட நடைமுறையாகும்.

சென்னை மற்றும் இந்திய மெட்ரோ நகரங்களில் இன்றைய பெட்ரோல் விலை…

சென்னை பெட்ரோல் – ₹ 77.70 டீசல் – ₹ 71.09
டெல்லி  பெட்ரோல் – ₹ 74.74 டீசல் – ₹ 67.41
மும்பை பெட்ரோல் – ₹ 80.40  டீசல் – ₹ 70.55
கொல்கத்தா  பெட்ரோல் – ₹  77.40 டீசல் – ₹ 69.66

 

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது. 

Source link

மும்பை: தொழிற்சாலையில் தீ விபத்து! 2 உடல்கள் மீட்புமும்பையில் நேற்று நள்ளிரவு தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. Source link

டெல்லியில் வரலாறு காணாத கடும் குளர்! 2.4 டிகிரி செல்சியஸ் பதிவு!டெல்லியில் இன்று காலை  6.10  மணி நிலவரப்படி குறைந்த பட்ச வெப்ப நிலை 2.4 டிகிரி செல்சியசாக இருந்தது. Source link

ரூ.10 லட்சத்திற்கு மேல் பாக்கி வைத்திருக்கும் அரசு அமைப்புகளுக்கு டிக்கெட் கிடையாது


டெல்லி: பல மாதங்களாக பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. பலமுறை நிதி உதவி அளித்து வந்தது மத்திய அரசு. ஆனாலும் நிதிப்பற்றாக்குறை தீர்ந்தபாடு இல்லை. எனவே இந்த நிறுவனத்தை விற்பனை செய்ய மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. அந்த முயற்சியும் கைகொடுக்க வில்லை. அதனால் ஏர் இந்தியா நிறுவனத்தை நிரந்தரமாக மூட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. 

ஏர் இந்தியா நிறுவனம் நிதிபற்றாக் குறையால் தவிப்பதற்கு காரணங்களில் ஒன்று பல அரசு அமைப்புகளில் உள்ள அரசு அதிகாரிகள் பயணம் செய்யும், அதற்கான கட்டணத்தை செலுத்தவது இல்லை. அந்த கட்டண பாக்கியை குறித்து எந்தவித கவனம் செலுத்துவது இல்லை. இதுவே தனியார் விமானம் என்றால் கட்டணம் செலுத்தியாக வேண்டும்.

இந்நிலையில், ஒவ்வொரு அரசு அமைப்பும் எவ்வளவு பாக்கி வைத்துள்ளது என்பது குறித்து ஏர் இந்தியா நிறவனம் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வுக்கு பிறகு அரசு அமைப்புகள் மொத்தம் ரூ.268 கோடி வரை பாக்கி வைத்துள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. அதனால் ரூ.10 லட்சத்திற்கு மேல் பாக்கி வைத்திருக்கும் அரசு அமைப்புகளுக்கு இனி டிக்கெட் வழங்கப்படாது. கட்டண பாக்கியை திருப்பி செலுத்தினால் மட்டுமே டிக்கெட் வழங்கப்படும் என ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. 

ஏர் இந்தியா பல தசாப்த கால வரலாற்றில் முதல் முறையாக இதுபோன்ற ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது. சிபிஐ, ஐபி, இடி, சுங்கத்துறை, இந்திய ஆடிட் போர்டு, மத்திய தொழிலாளர் நிறுவனம், இந்திய தணிக்கை வாரியம், பாதுகாப்பு கட்டுப்பாட்டாளர் மற்றும் எல்லை பாதுகாப்பு படை போன்ற அமைப்புக்களை சேர்ந்தவர்களின் பெயர்களை உள்ளடக்கிய அவர்களின் நிலுவைத் தொகை பட்டியலை நிறுவனம் தயாரித்துள்ளது. 

கடந்த மாதம், ஏர் இந்தியாவின் நிதித்துறை ஒவ்வொரு பிராந்தியத்திலிருந்தும் / நிலையங்களிலிருந்தும் அரசாங்க நிலுவைத் தொகையை குறித்து கணக்கு எடுக்கத் தொடங்கியது. இதுக்குறித்து ஒரு விமான அதிகாரி கூறுகையில், கடந்த சில வாரங்களில் “லட்சத்துக்கும் மேற்பட்ட கடனாளிகள்” பணத்தை திருப்பி அளித்துள்ளனர். பணம் செலுத்திய பின்னரே அவர்களுக்கு டிக்கெட் வழங்கப்படுகிறது. இதில் மக்களவை உறுப்பினர், விமான போக்குவரத்து அமைப்பு மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் ஆகியவற்றிற்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதை உறுதிப்படுத்திய ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் ஒருவர், “கடந்த சில வாரங்களில் சுமார் ரூ .50 லட்சத்தை மீட்டுள்ளோம். அரசு அமைப்புகளிடம் இருந்து நிலுவைத் தொகையைப் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும் கட்டணத்தைப் பெறுவதற்கு கடுமையான அணுகுமுறையைப் பயன்படுத்த முடியாது எனக் கூறினார்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Source link

இந்திய பெரு நகரங்களில் இன்று பெட்ரோல், டீசல் விலை என்ன?


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (27.12.2019) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

அரசாங்க எண்ணெய் நிறுவனங்கள், விலைகளை மதிப்பாய்வு செய்த பின்னர், ஒவ்வொரு நாளும் பெட்ரோல் மற்றும் டீசல் விகிதங்களை நிர்ணயிக்கின்றன. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் திருத்தப்பட்டு, தினசரி காலை 6 மணி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை வெளியிடுகின்றன.

பெட்ரோல், டீசல் விலைகளானது கடந்த ஜூன் 17, 2017 முதல் நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் நடைமுறை இந்தியாவில் கொண்டுவரப்பட்டது. இது ஒவ்வொரு வாரமும் பெட்ரோல், டீசல் விலையை மறுசீரமைக்கும் முந்தைய நடைமுறையிலிருந்து மாற்றம் செய்யப்பட்ட நடைமுறையாகும்.

சென்னை மற்றும் இந்திய மெட்ரோ நகரங்களில் இன்றைய பெட்ரோல் விலை…

சென்னை _____ பெட்ரோல் – ₹ 77.63 _____ டீசல் – ₹ 70.88
டெல்லி ________ பெட்ரோல் – ₹ 74.60 _____ டீசல் – ₹ 66.094
மும்பை _______ பெட்ரோல் – ₹ 80.26 _____ டீசல் – ₹ 70.23
கொல்கத்தா __பெட்ரோல் – ₹  77.26_____ டீசல் – ₹ 69.35

மேலும் அன்மை செய்தி, சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN தொலைக்காட்சியை பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Source link

பொதுசொத்தை சேதப்படுத்திய 498 பேருக்கு உ.பி. அரசு நோட்டீஸ்…குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் NRC-க்கு எதிரான போராட்டங்கள் தொடர்கையில், ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளது. இதன்போது பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக உத்தரப்பிரதேச அரசு 498 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.Source link

ஹிட்லரின் படையுடம் RSS படையை ஒப்பிட்ட பாகிஸ்தான் பிரதமர்…!


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்திற்கு (RSS) எதிரான தனது ட்வீட் மூலம் இந்தியாவின் உள் விஷயங்களில் மீண்டும் இறங்கியுள்ளார்!

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் NRC-க்கு எதிரான நாடு தழுவிய எதிர்ப்புக்களுக்கு மத்தியில், இம்ரான் கான் சர்வதேச சமூகத்தை எச்சரிக்கும் விதமாக “முஸ்லீம் இனப்படுகொலைக்கு RSS வழிவகுப்பதற்கு முன் எழுந்திருங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

கானின் கூற்றுப்படி, ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீதான வெறுப்பின் அடிப்படையில் போராளிகள் உருவாகும்போது “அது எப்போதும் இனப்படுகொலையில் முடிவடைகிறது” என குறிப்பிட்டுள்ள இம்ரான் கான், RSS தன்னார்வலர்களை ஜேர்மன் சர்வாதிகாரி அடோல்ஃப் ஹிட்லரின் பிரவுன் ஷர்ட்டுடன் ஒப்பிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்., “முஸ்லீம் இனப்படுகொலைக்கு RSS வழிவகுப்பதற்கு முன் சர்வதேச சமூகங்களே எழுந்திருங்கள். ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீதான வெறுப்பின் அடிப்படையில் (அடோல்ஃப் ஹிட்லரின் படை அல்லது RSS போன்ற) போராளிகள்  உருவாகும்போது அது எப்போதும் இனப்படுகொலையில் முடிவடையும்.” என குறிப்பிடுள்ளார்.

முன்னதாக தெலுங்கானாவின் தலைநகரான ஹைதராபாத்தில் RSS தன்னார்வலர்களை நடத்திய ஊர்வலம் குறித்த வீடியோ பதிவினை மேற்கொள்காட்டி கான் தனது ட்விட்டை தட்டியுள்ளார்.

வீடியோவில், புதன்கிழமை நடைபெற்ற முதல் RSS-தெலுங்கானா ப்ரந்த் சந்திப்பிற்காக நூற்றுக்கணக்கான RSS காரியகார்த்தங்கள் ஹைதராபாத் தெருக்களில் அணிவகுத்து வருவதைக் காணலாம்.

உத்தரபிரதேசத்தில் நடந்த வன்முறை CAA எதிர்ப்பு போராட்டங்களில் இதுவரை 19 பேர், கர்நாடகாவில் இரண்டு பேர், அசாமில் ஐந்து பேர் பல வாரங்களுக்கு முன்பு போராட்டங்கள் தொடங்கியதில் இருந்து இறந்துள்ளனர். தேசிய தலைநகர் புது தில்லி உட்பட இந்தியா முழுவதும் பல நகரங்களில் போராட்டக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே RSS தனது பேரணியினை ஹைதராபாத்தில் ஒருங்கிணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக ஹைதராபாத்தில் நடத்தப்பட்ட RSS பொதுகூட்டத்தில் பேசிய RSS தலைவர் மோகன் பகவத்., நாட்டின் 130 கோடி மக்கள் தொகையும் இந்துக்களே என குறிப்பிடும் விதமாக “RSS ஒருவரை இந்து என்று அழைக்கும் போது, ​​இந்தியாவை தங்கள் தாய்நாடாக கருதி அதை நேசிப்பவர்கள் என்று அர்த்தம்… பாரத தாய் இந்தியாவின் மகன்/மகன் எந்த மொழியைப் பேசுகிறார், எந்த மதத்தை பின்பற்றுகிறார், எந்த விதமான வழிபாட்டைப் பின்பற்றுகிறார் என பார்ப்பது இல்லை, எவ்வாறாயினும் அவர் ஒரு இந்து” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் “ராஷ்டிரிய சங்கத்தைப் பொறுத்தவரை, இந்தியாவின் 130 கோடி மக்களும் ஒரு இந்து சமுதாயம். RSS அனைவரையும் தங்கள் சொந்தமாகக் கருதுகிறது, அனைவரின் வளர்ச்சியையும் விரும்புகிறது. அனைவரையும் ஒன்றாக அழைத்துச் செல்ல சங்கம் விரும்புகிறது,” என தெரிவித்துள்ளார்.

Source link

மம்தா பானர்ஜி தனது மன சமநிலையை இழந்துவிட்டார் -பாஜக பிரமுகர்


மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது மன சமநிலையை இழந்துவிட்டதாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்ஜியா தெரிவித்துள்ளார்.

திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்களின் பதிவு (NRC)-க்கு எதிரான போராட்டங்களைத் தொடர மாணவர்களுக்கு மேற்கு வங்க முதல்வர் அறிவுறுத்துவதாக கூறப்பட்டதை அடுத்து, மம்தா பானர்ஜி தனது மன சமநிலையை இழந்துவிட்டதாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்ஜியா வியாழக்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., “மம்தா பானர்ஜி தனது மன சமநிலையை இழந்துவிட்டார் என்று நான் நினைக்கிறேன். CAA-க்குப் பிறகு, ஊடுருவல்வாதிகள் அடையாளம் காணப்பட்டு அகற்றப்படுவார்கள் என்பதால் அவரது வாக்கு வங்கி நிச்சையம் பாதிக்கப்படும். இந்த அச்சத்தில் அவர் தனது மன நிலையை இழந்து, கட்டுப்பாடற்ற செயல்களைச் செய்கிறார்… அவர் மருத்துவ ரீதியாக பரிசோதிக்கப்பட வேண்டும்,” என்று விஜயவர்ஜியா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை கொல்கத்தாவில் நடந்த ஒரு பொது பேரணியில் பேசிய பானர்ஜி, அனைத்து மாணவர்களுக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் NRC-க்கு எதிரான போராட்டத்தை ஜனநாயக முறையில் தொடரச் சொன்னதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் துன்புறுத்தப்பட்ட மத சிறுபான்மையினருக்கு புலம் பெயர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்தச் சட்டம், தற்போது நாடெங்கிலும் போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளது. காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இந்த சட்டத்திற்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர், எனினும் தங்களது நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கும் முடிவு இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் காங்கிரஸ் தலைமையிலான பொய் போராட்டக்காரர்கள் மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்தி வருகின்றனர் எனவும் குற்றம்சாட்டி வருகிறது. 

இதனிடையே இந்திய அரசியலமைப்புக்கு எதிராக கொண்டுவரப்படும் இந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தங்கள் மாநிலத்தில் அனுமதி இல்லை என கேரளா முதல்வர் பினராயி விஜயன், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் அமேரேந்திர சிங் ஆகியோர் பகிரங்கமாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link