இ.எம்.ஐ.,விவகாரத்தில் நிபுணர் குழு : மத்திய அரசு தகவல்| Dinamalar


புதுடில்லி : ‘இ.எம்.ஐ., ஒத்திவைப்பு காலத்துக்கு வட்டி வசூலிப்பது தொடர்பான பிரச்னை குறித்து ஆய்வு செய்ய, நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது’ என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
‘இரண்டு வாரங்களுக்குள் விரிவான பதில் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.’கொரோனா’ வைரஸ் பரவலால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், தனி நபர் முதல், பல தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

மாதத் தவணை

பொருளாதார பாதிப்பை சமாளிக்கும் வகையில், பல்வேறு மீட்பு திட்டங்களை, சலுகைகளை மத்திய அரசு அறிவித்தது.’இ.எம்.ஐ., எனப்படும் வங்கிகளில் வாங்கிய கடன்களுக்கான மாதத் தவணையை, மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்கலாம். ‘அவ்வாறு செலுத்தாவிட்டாலும், என்.பி.ஏ., எனப்படும் வாராக் கடனாக பார்க்கப்படாது’ என, முதலில் அறிவிக்கப்பட்டது. இந்த வசதி, மார்ச் மாதத்தில் இருந்து அமலுக்கு வந்தது.

அது மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.இந்நிலையில், இ.எம்.ஐ., ஒத்திவைப்பு காலத்தில், கடனுக்கான வட்டி மற்றும் வட்டி மீது வட்டி விதிக்கப்படுவதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை, நீதிபதிகள், அசோக் பூஷன், ஆர். சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா அமர்வு விசாரித்து வருகிறது.’இந்தாண்டு, ஆக., 31ம் தேதி நிலவரப்படி, வாராக் கடன்களாக அறிவிக்கப்படாத கணக்குகளை, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, வாராக் கடன்களாக அறிவிக்கக் கூடாது’ என, உச்ச நீதிமன்றம் தன் இடைக்கால உத்தரவில் கூறியிருந்தது.

நடவடிக்கை

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:இ.எம்.ஐ., ஒத்திவைப்பு தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து ஆராய, மத்திய அரசில், உயர்மட்ட அளவில் பரிசீலனையில் உள்ளது. வங்கிகள் உட்பட பல்வேறு தரப்பினருடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் தெரிவிக்கப்பட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆராய, நிபுணர் குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. உரிய நடவடிக்கைகள் எடுக்க, இரண்டு வாரங்கள் அவகாசம் அளிக்க வேண்டும்.ஏற்கனவே, மத்திய அரசு பல்வேறு தரப்பினருடன், இரண்டு அல்லது மூன்று முறை பேச்சு நடத்தியுள்ளது. மனுதாரர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளவை கனிவுடன் பரிசீலிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.வங்கிகள் சங்கம் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், ஹரிஷ் சால்வே கூறியதாவது:கடன் தொகையை செலுத்தாத காலத்துக்கும் வட்டி வசூலிப்பது என்பது, அனைத்து நாடுகளிலும் உள்ள நடைமுறை தான். இந்த விவகாரத்தில் உரிய வழிகாட்டுதலை வெளியிட வேண்டும். மின் துறைக்கு தரப்பட்ட கடன்களுக்கு, வங்கி களே அனைத்து சுமைகளையும் ஏற்க இயலாது. இதில், மாநிலங்களையும் ஈடுபடுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

கடைசி வாய்ப்பு!

அனைத்து தரப்பு வாதங்களுக்குப் பின், உச்ச நீதிமன்ற அமர்வு கூறியதாவது:நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதுடன், இந்தப் பிரச்னை குறித்து, அரசின் உயர்மட்ட அளவில் ஆய்வு செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. அதனால், தற்போதைக்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இ.எம்.ஐ., செலுத்தாவிட்டாலும், வாராக் கடனாக அறிவிக்கக் கூடாது என்ற இடைக்கால உத்தரவு தொடரும்.
மத்திய அரசுக்கு அளிக்கப்படும் கடைசி வாய்ப்பு இதுவாகும். இதற்கு மேலும் வழக்கை நீட்டிக்காமல், அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் வகையில் ஆலோசித்து, இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, அமர்வு கூறியது.வழக்கின் விசாரணை, வரும், 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

AdvertisementSource link

Central government plan for 5 crore jobs in MSME sector says Nitin gadkari | நற்செய்தி.. 5 கோடி வேலை வாய்ப்புகளுக்கான மத்திய அரசின் திட்டம்..!!!


நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பை வலுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேலையற்றவர்களுக்கு நற்செய்தியைச் செய்துள்ளார். இதற்கான திட்டத்தை மத்திய அரசு தயார் செய்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில்  (MSME ) 5 கோடி கூடுதல் வேலைவாய்ப்புகளை வழங்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது என்று கட்கரி (Nitin Gadkari) கூறுகிறார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) MSME பங்களிப்பை சுமார் 30 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாகவும், ஏற்றுமதியில் 49 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாகவும் உயர்த்துவதே தனது குறிக்கோள் என்று MSME, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். தற்போது, ​​எம்.எஸ்.எம்.இ துறையில் சுமார் 1 ஒரு கோடியே பத்து மக்கள் பணியாற்றுகின்றனர்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் புதுமை முயற்சி மேற்கொள்பவர் மற்றும் தொழில்முனைவோருக்கு, அதிக அளவில் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் போது, திறமையானவர்கள் முன்னேற வாய்ப்புகள் கிடைக்கும் என்று கட்கரி கூறினார்.

ALSO READ | Moratorium: கடன் தவணை சலுகை செப்.28 வரை நீட்டிப்பு..!!!

புதன்கிழமை ஒரு மெய்நிகர் கூட்டத்தில் உரையாற்றிய கட்கரி, நிதி ஆயோக்கின் முன்முயற்சியான “Arise Atal New India Challenge” என்னும் திட்டத்தை பாராட்டினார். வெவ்வேறு பகுதிகளில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், கூடுதல் ஆதாயம் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். உபரி அரிசியின் பயன்பாடு குறித்து குறிப்பிட்ட அவர், எத்தனால் உற்பத்தியில் உபரி அரிசியை பயன்படுத்தலாம் என்று கூறினார். இதனால் சேமிப்பு கிடங்கில் வைப்பதால் ஏற்படும் பிரச்சனை  குறையும் என்பதோடு, சுற்றுசூழலை மாசுபடுத்தாத  எரிபொருளூம் நாட்டிற்கு கிடைக்கும் என்றார்.

ALSO READ | மாதம் ₹70,000 வரை சம்பாதிக்க Amazon வழங்கும் அற்புத வாய்ப்பு..!!!

MSME  என்பது நாட்டின் வளர்ச்சி இயந்திரம் என்றும் அத்துறையில் பல எதிர்பார்ப்புகள் உள்ளன என்றும் நிதின் கட்கரி கூறினார். இந்தத் துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான புதுமை முயற்சிகளை அடையாளம் கண்டு ஊக்குவிக்க இந்த திட்டம் உதவும் என்று தான் நம்புவதாக குறிப்பிட்டார். விஞ்ஞான ஆராய்ச்சி தொடர்பான பிரதமர் மோடியின் அணுகுமுறை பற்றி குறிப்பிட்ட அவர், சமூக-பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க அறிவியல் உதவ வேண்டும், அறிவியல் ஆராய்ச்சி ஆய்வகங்களிலிருந்து மக்களுக்கு பயன்படும் வகையில் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்றார்.

Source link

Mukesh Ambani in fifth spot in worlds rich list net worth crosses 88 billion for first time | உலக பணக்காரர் வரிசையில் 5-வது இடத்தில் முகேஷ் அம்பானி: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?


புதுடெல்லி: ஃபோர்ப்ஸ்-ன் (Forbes) படி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும் எம்.டி.யுமான முகேஷ் அம்பானி (Mukesh Ambani) வியாழக்கிழமை உலக பணக்காரர்களின் வரிசையில் 5 வது இடத்தைப் பெற்றார். 200 பில்லியன் டாலருக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதல் இந்திய நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries) ஆன பிறகு முதல்முறையாக அவரது நிகர மதிப்பு 88.4 பில்லியன் டாலர் என்ற அளவைக் கடந்துள்ளது.

ஃபோர்ப்ஸின் நிகழ்நேர நிகர மதிப்பு தரவுகளின்படி, செப்டம்பர் 10 ஆம் தேதி அம்பானியின் சொத்து மதிப்பு 7.8 பில்லியன் டாலர் அதிகரித்து 88.4 பில்லியன் டாலராக (ரூ. 6.4 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த சில்வர் லேக் (Silver Lake) ரிலையன்ஸ் சில்லறை விற்பனையில் ஒரு பங்கை வாங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து RIL நிறுவனத்தின் பங்குகள் லாபத்தைக் கண்டன. ரிலையன்ஸ் ஜியோவுக்குப் பிறகு, இப்போது சில்வர் லேக் ரிலையன்ஸ் சில்லறை விற்பனையில் 1.75 சதவீத பங்குகளை ரூ .7,500 கோடிக்கு வாங்கும்.

ALSO READ: Amazon, Walmart நிறுவனக்களுக்கு சவாலாக உருவெடுக்கும் Reliance …!!!

வியாழக்கிழமை பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கியதும், நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ. 14.7 லட்சம் கோடியைத் தாண்டியதும் அம்பானி தலைமையிலான RIL பங்குகள் நல்ல அதிகரிப்பைக் கண்டன என்பது குறிப்பிடத்தக்கது. பிற்பகல் 2 மணி வரை அவரது சொத்து 7.9 பில்லியன் டாலர் அதிகரித்தது. இந்த எழுச்சியின் காரணமாக, தற்போது அவரது நிகர மதிப்பு இப்போது 88.4 பில்லியன் டாலராக உள்ளது.

ஃபோர்ப்ஸ் பணக்காரர்களின் பட்டியலில், முகேஷ் அம்பானி இப்போது டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் முதலாளி எலன் மஸ்க் மற்றும் பெர்க்ஷயர் ஹாத்வே டாப் பாஸ் வாரன் பஃபெட் ஆகியோரை மிஞ்சியுள்ளார்.

அந்த பட்டியலின்படி, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் நான்காவது இடத்தில் உள்ளார். பில்லியனர் முதலீட்டாளர் பஃபெட் இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளார். மஸ்க் ஏழாவது இடத்தில் உள்ளார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) 192.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இன்னும் முதலிடத்தில் உள்ளார். 

பில் கேட்ஸ் 115.6 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். ​​பெசோஸ் மற்றும் கேட்ஸின் நிகர மதிப்பு 76.5 பில்லியன் டாலர்களாகும். ஃபோர்ப்ஸின் படி மூன்றாவது பணக்காரர் பெர்னார்ட் அர்னால்ட் & குடும்பம்.

200 பில்லியன் டாலர் (சுமார் 15 லட்சம் கோடி ரூபாய்) சந்தை மூலதனத்தைத் தொட்ட இந்தியாவின் முதல் நிறுவனமாக, RIL இன்று வரலாற்றை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இன்ட்ராடே டிரேடிங்கின் போது, ​​BSE-ல் RIL-ன் பங்குகள் 8.45 சதவீதம் உயர்ந்து 2,343.90 ரூபாய் என்ற அளவில் இதுவரை காணாத உச்சத்தை எட்டின. 

ALSO READ: தொலைத் தொடர்புத் துறைக்குப் பிறகு Retail Sector-ரையும் ஆளப் போகிறார் Mukesh Ambani!!

Source link

Schools all set to reopen after 6 months know what changes the schools will have | மீண்டும் பள்ளி மணியோசை: கொரோனா காலத்து பள்ளி எப்படி இருக்கும்? இதோ பார்க்கலாம்!!


புதுடெல்லி: கொரோனா (Corona) காலத்தில் சுமார் 6 மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில், பல விதிமுறைகளுடன் செப்டம்பர் 21 முதல் பள்ளிகள் (Schools) திறக்கப்பட உள்ளன. 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, 9 முதல் 12 ஆம் அவகுப்பு வரை உள்ள மாணவர்கள் ஆசிரியரிடம் ஆலோசனை பெற பள்ளிக்கு செல்ல முடியும். இதற்காக, பெற்றோரின் எழுத்துப்பூர்வ அனுமதி தேவைப்படும். எந்தப் பள்ளியும் குழந்தைகள் பள்ளிக்கு வர வெண்டும் என அவர்களை கட்டாயப்படுத்த முடியாது.

கொரோனா நாம் வாழும் முறையை பல விதத்தில் மாற்றியமைத்துள்ளது. அதேபோல் பள்ளிகளும் அவற்றின் உள்கட்டமைப்பை மாற்றியுள்ளன. கொரோனாவுக்கு எதிராக போராடவும், முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும் பள்ளிகள் முழுமையாக தயாராக உள்ளன.

கொரோனா காலத்தில் பள்ளிகள் எப்படி இருக்கும்

– பள்ளிகள் இதற்கான பல ஏற்பாடுகளைச் செய்துள்ளன. குழந்தைகள் நுழைவு வாயிலிலிருந்து உள்ளே வரும் முன், ஸ்க்ரீனிங் (Screening) செய்யப்படுவார்கள். அதன் பிறகு அவர்களின் காலணிகள் சுத்தப்படுத்தப்படும்.

– குழந்தைகள் உள்ளே வரவும் வெளியேறவும் வெவ்வேறு வழிகள் உருவாக்கப்படும். இந்த வழிகளில் தனி மனித இடைவெளிக்கான (Social Distancing)  குறிகள் போடப்பட்டிருக்கும்.

– மாணவர்களை தொற்றுநோயிலிருந்து காப்பாற்ற, பள்ளிகள் முற்றிலும் ‘touch-free’-யாக இருக்கும். டச்-ஃப்ரீ வாஷ் பேசின்கள் பள்ளிகளில் நிறுவப்பட்டுள்ளன. அத்துடன் தொடத் தேவை இல்லாத சேனிடைசர்களும் வைக்கப்படும்.

– இது மட்டுமல்லாமல், இப்போது மாணவர்களின் வருகைப் பதிவும், அதாவது அடெண்டன்சும், ‘touch-free’-யாக இருக்கும். இதற்காக, ஒரு சிறப்பு இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. அதில் ஒரு நேரத்தில் வருகை, வெப்ப திரையிடல் மற்றும் முகக்கவச சோதனை அனைத்தும் செய்யப்படும். மாணவர் முகக்கவசம் அணியவில்லை என்றால், இந்த இயந்திரம் அதையும் சொல்லும்.

பள்ளிகளில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும்

– வகுப்பில் உட்கார பெஞ்சுகள் வெகு தொலைவில் வைக்கப்பட்டிருக்கும்.  ஒரே நேரத்தில் ஒரு பெஞ்சில் ஒரு மாணவர் மட்டுமே அவர முடியும். மாணவர்களின் இருக்கைகள் நிர்ணயிக்கப்படும்.

– வகுப்பு அறைகளுடன் ஆசிரியர்களும் மாறிய வடிவில் காணப்படுவார்கள். அனைத்து ஆசிரியர்களும் கண்டிப்பாக ஃபேஸ் ஷீல்டுகளை அணிய வெண்டும்.

– மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப விரும்பாத பெற்றோர்கள், வீட்டிலிருந்து மாணவர்களை நேரடி வகுப்புகளைக் காண வைக்கலாம். வகுப்பறைகள் அவ்வப்போது சுத்திகரிக்கப்படும்.

ALSO READ: தேர்வுகளை நடத்த திருத்தப்பட்ட SOP-ஐ வெளியிட்டது சுகாதார அமைச்சகம்: விவரம் உள்ளே!!

பள்ளிகளுக்கான வழிகாட்டுதல்கள் என்ன

– கொரோனாவின் ஆபத்து நீங்காத வரையிலும், அரசாங்கத்திடமிருந்து எந்த அறிவுறுத்தலும் வராத வரையிலும், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் ஆன்லைனில் படிப்பார்கள்.

– செப்டம்பர் 21 முதல், கட்டுப்பாட்டு மண்டலத்திற்கு வெளியே உள்ள பள்ளிகள் மட்டுமே திறக்கப்படும்.

கட்டுப்பாட்டு மண்டலத்திற்கு (Containment Zones) வெளியே வசிக்கும் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள்.

– பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரின் எழுத்துப்பூர்வ அனுமதியைப் பெறுவது கட்டாயமாகும். பள்ளிக்கு வரும் மாணவர்கள் எந்த வகையிலும் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள். அவர்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே அவர்களது வருகை இருக்கும்.

– மாணவர்களிடையே குறைந்தது 6 அடி இடைவெளி இருக்க வேண்டும். இது தவிர, முகக்கவசம் / முகமூடி (Face Nask) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது பயோமெட்ரிக் வருகைப் பதிவு இருக்காது.

– பள்ளியின் உள்ளே, மாணவர்கள் அவ்வப்போது கைகளை சுத்தம் செய்துகொள்ள வேண்டும். வளாகத்தில் துப்புவது தடைசெய்யப்பட்டுள்ளது.

– ஒவ்வொரு மாணவர் மற்றும் ஊழியர்களின் வெப்ப பரிசோதனை வாயிலில் செய்யப்படும். அவர்களின் கைகளும் வாயிலிலேயே சுத்தப்படுத்தப்படும்.

– மாணவர்கள் தங்களின் பேனாக்கள், பென்சில்கள், நோட்புக்குகள் அல்லது வேறு எந்த பொருட்களையும் பகிர்ந்து கொள்ளக்கூடாது.

– கூடுதலாக, பள்ளி மைதானத்தில் எந்தவொரு விளையாட்டு அல்லது உடல் பயிற்சி செயல்பாடுகளும் தடைசெய்யப்பட்டுள்ளன.

– பள்ளிக்கு வரும் அனைத்து மக்களும் ஆரோக்ய சேது செயலியை (Arogya Sethu App) தங்கள் ஃபோனில் வைத்திருப்பது கட்டாயமாகும். இதனுடன், அனைத்து பள்ளிகளும் தங்கள் வளாகத்தில் பல்ஸ் ஆக்சிமீட்டரை (Pulse Oximeter) வைத்திருக வேண்டும். 

ALSO READ: பயங்கரமான நிலை…..நாட்டின் அனைத்து பதிவுகளையும் முறியடித்தது கொரோனா வைரஸ்!

Source link

80 special trains to start from September 12 reservation starts today check full list | Sep 12 முதல் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள், இன்று முன்பதிவு துவக்கம்: முழு பட்டியல் இதோ!!


புதுடெல்லி: அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் (Corona Virus)  தொற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த இந்தியா போராடிக் கொண்டிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில், செப்டம்பர் 12 முதல் மேலும் 80 சிறப்பு ரயில்கள் (Special Trains) இயக்கப்படும் என இந்தியன் ரயில்வே (Indian Railways) அறிவித்துள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 10 முதல் தொடங்கும்.

ஏற்கனவே இயங்கும் 230 ரயில்களுக்கு கூடுதலாக இந்த 80 ரயில்களும் இயக்கப்படுகின்றன. ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ் கூறுகையில், “எட்டு புதிய சிறப்பு ரயில்கள் அல்லது 40 ஜோடி ரயில்கள் செப்டம்பர் 12 முதல் இயங்கத் தொடங்கும். முன்பதிவு (Reservations) செப்டம்பர் 10 முதல் தொடங்கும். இவை ஏற்கனவே இயங்கும் 230 ரயில்களுக்கு கூடுதலாக இயங்கும்.” என்றார்.

எந்த ரயில்களில் நீண்ட காத்திருப்பு பட்டியல் உள்ளது என்பதை தீர்மானிக்க தற்போது இயக்கப்படும் அனைத்து ரயில்களும் கண்காணிக்கப்படும் என்று யாதவ் சுட்டிக்காட்டினார். மேலும், தேர்வுகள் மற்றும் அதைப் போன்ற பிற அத்தியாவசியத் தேவைகளுக்காக மாநிலங்கள் கூடுதல் ரயில்களைக் கோரும் போதெல்லாம் ரயில்கள் இயக்கப்படும் என்று அவர் கூறினார்.

முழு பட்டியல் இதோ:

Railways, IRCTC

ரயில்வே அமைச்சகத்தின் (Railway Ministry) கூற்றுப்படி, ரயில் பயணிகளில் ஒரு புதிய போக்கு காணப்பட்டது. இதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மீண்டும் பணிகளுக்குத் திரும்புகிறார்கள்.

Railways, IRCTC

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் பணிக்காக நகரங்களை அடைவதில் எந்த சிரமமும் இருக்கக்கூடாது என்பதற்காக செப்டம்பர் 12 முதல் 80 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே முடிவு செய்தது.

ALSO READ: தென்னிந்தியாவிலிருந்து டெல்லிக்கு முதல் கிசான் ரயிலை இயக்கியது இந்திய ரயில்வே!

Source link

Rain alert for Tamil Nadu for the next 24 to 48 hours fishermen alert | தமிழகத்தில் இங்கெல்லாம் கன மழை பெய்யக்கூடும்: மீனவர்கள் எச்சரிக்கை!!


இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பருவமழை (Monsoon) பெய்து வருகிறது. தமிழகத்திலும் அவ்வப்போது நல்ல மழை பெய்துகொண்டிருக்கின்றது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai Meteorological Centre) தெரிவித்துள்ளது. இது தவிர கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், சேலம், ஆகிய

மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருச்சி, வேலூர், திருவண்ணாமலை, கடலுர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திண்டுக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கும் மேற்கூறிய வானிலை முன்னறிவிப்பையே வானிலை ஆய்வு மையம் வழங்கியுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மாவட்டங்களிலும் அடுத்த 48 மணி நேரங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தலைநகர் சென்னை (Chennai) மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியசாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசாகவும் பதிவாகலாம்.

 வரும் நாட்களில் மழையின் அளவு அதிகரிக்கலாம் என்ற கணிப்பு இருப்பதால் மீனவர்களுக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ: 2100-ல் உலக மக்கள் தொகையில் டாப் 10 நாடுகளின் பட்டியல் இதோ!!

செப்டம்பர் 10ஆம் தேதி முதல் செப்டம்பர் 14 வரை, 45-55 கிலோமீட்டர் வேகத்தில் கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், செப்டம்பர் 10,11 ஆகிய தேதிகளில் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 10ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்ற எச்சரிக்கையும் உள்ளது. ஆகையால் இந்தப் பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள். .

தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை நாளை அதாவது செப்டம்பர் 11, வெள்ளியன்று நள்ளிரவு வரை கடல் அலை 3.0 முதல் 3.9 மீட்டர் வரை எழும்பக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதை மனதில் வைத்துக்கொண்டு மக்கள் கடற்கரை அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் அடுத்த சில நாட்களுக்கு தமிழகம் முழுவதுமே பரவலான மழையை எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

ALSO READ: இந்தியாவில் விரைவில் கிடைக்கும் COVID மருந்து: Reda-x-ஐ வெளியிடவுள்ளது Dr. Reddys

Source link

Astronaut kalpana chawla, Kalpana Chawla Spacecraft, NASA, US Spacecraft | Kalpana Chawla: அமெரிக்க விண்கலத்திற்கு கல்பனா சாவ்லா பெயர் சூட்டப்பட்டது..!!!


விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவை யாராலும் மறக்க முடியாது. 

இந்திய வம்சாவழியை சேர்ந்த கல்பனா சாவ்லா, விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமைக்குரியவர். கடந்த 2003ம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சிக்காக அமெரிக்கா அனுப்பிய கொலம்பியா விண்கலத்தை அனுப்பியது.  STS-107 என்ற அந்த விண்கலத்தில் கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 விண்வெளி வீரர்கள் பயணித்தனர். அவர்கள் தங்கள் மிஷனை மீண்டும் பூமிக்கு திரும்பிய போது விண்கலம் வெடித்து சிதறியதில் அவர் உயிரிழந்தார். 

கல்பனா சாவ்லாவை கவுரவிக்கும் வகையில், அமெரிக்கா சர்வதேச விண்வெளி மையத்திற்கு பொருட்களை எடுத்து செல்லும் விண்கலத்திற்கு நாசாவின் மறைந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா நினைவாக, அவரது பெயரை சூட்டியுள்ளது. 

விண்வெளித்துறையில் அவர் அளித்த பங்களிப்பிற்காக அவருக்கு இந்த மரியாதை வழங்கப்பட்டுள்ளது.

கல்பனா சாவ்லா விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் பெண் ஆவார்.

அமெரிக்க உலகளாவிய விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான நார்த்ரூப் கிரஹ்மான்,  2003 ஆம் ஆண்டில் கொலம்பியாவில் விண்கலத்தில் ஆறு பேர் கொண்ட குழு விண்வெளிக்கு பயணம் மேற்கொண்ட மிஷன்  நினைவாக “எஸ்.எஸ். கல்பனா சாவ்லா” என்று பெயரிடப்படுவதாக அறிவித்தார். 

 “நாசாவில் வரலாறு படைத்த கல்பனா சாவ்லாவை, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண் விண்வெளி வீராங்கனையை நாங்கள் கவுரவிக்கிறோம். மனிதர்கள் ஏற்றிச் சென்ற விண்கலம் தொடர்பான மிஷனில் அவர் அளித்த பங்களிப்பு நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும். ” என அந்நிறுவனம் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளது.

நிறுவனம் தனது இணையதளத்தில், “முன்னாள் விண்வெளி வீரர் கல்பனா சாவ்லாவின் பெயரை என்ஜி -14 சிக்னஸ் ( NG-14 Cygnus) விண்கலத்திற்கு பெயரிடுவதில் நார்த்ரோப் கிரஹ்மன் நிறுவனம் பெருமிதம் கொள்கிறது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் மிஷனில் முக்கிய பங்கு வகித்த நபர்களை கவுரவிப்பது நிறுவனத்தின் பாரம்பரியமாகும்” என கூறியுள்ளது.

“விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் பெண்மணி  என வரலாற்றில் தனது முக்கிய இடத்தை பெற்றுள்ள அவரை கவுரவிப்பதற்காக சாவ்லா தேர்ந்தெடுக்கப்பட்டார்” என்று அவர் கூறினார்.

ALSO READ | விண்வெளிப்பயணம் மேற்கொண்ட எலிகள் ‘பாடி பில்டர்களாக’ திரும்பின…!!!

Source link

தமிழகத்தின் இன்றைய COVID-19 நிலவரம்: 5,528 பேருக்கு பாதிப்பு; 64 பேர் மரணம்..இன்று 6,185 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 4,29,416 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். Source link

Police in fix after murdered man walks back home arrested brothers relieved | தகனம் செய்யப்பட்ட தொழிலாளி உயிரோடு திரும்பினார்: Police கொடுமை அம்பலம்!!


அகமதாபாத்: குஜராத் (Gujarat) காவல்துறையினரால் நடத்தப்பட்ட விசாரணையில், ஒரு தொழிலாளியை கொலை செய்ததாக அவரது இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், கொலை செய்யப்பட்டதாக கருதப்பட்ட அந்த தொழிலாளி, ஆரவல்லி மாவட்டத்தில் (Aravalli District) உள்ள கார்படா கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பி வந்தார்.

ஆனால், வீடு திரும்பியதும் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் இறந்து விட்டதாக எண்ணப்பட்டதாகவும், பிப்ரவரி மாதமே தகனம் செய்யப்பட்டதாகவும் அவர் அறிந்து கொண்டார்.

இந்த சம்பவம் இஸ்ரி காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்டது. ஈஸ்வர் மனத் என்ற அந்த தொழிலாளி, வீடு திரும்பிய பின்னர், காந்திநகர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அபய் சூடாசாமா இன்ஸ்பெக்டர் ஆர்.ஆர்.தபியாத்தை இடைநீக்கம் செய்தார். விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பிப்ரவரியில் மாவட்டத்தின் மோதி மோரி கிராமத்தில் ஒரு மனிதனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. உடலின் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் உள்ளூர் மக்களிடமிருந்து உறுதிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில், இது மனத்தின் உடல் என்று போலீசார் முடிவு செய்தனர். உடலின் காலில் ஒரு இரும்புக் கம்பியும் இருந்தது, மனத்துக்கும் இதேபோன்ற ஒரு கம்பி இருந்தது.

ALSO READ: அட…வீட்ட சுத்தம் செஞ்சப்ப Tea-Pot வடிவத்துல அடிச்ச 95 லட்சம் Jackpot!!

அதன்பிறகு, விசாரணை அதிகாரிகள் மனத்தின் இரண்டு சகோதரர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். விசாரணையின் போது, ​​அவரைக் கொன்றதாக அவர்கள் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்கள் துணை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

விசாரணை அதிகாரிகள் (Investigating Officials) சித்திரவதை செய்ததாகவும், தனது சகோதரர்களை கட்டாயப்படுத்தி அவர்கள் செய்யாத குற்றத்தை ஒப்புக் கொள்ளும்படி செய்ததாகவும் மனத் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், COVID-19 தொற்று காரணமாக அரசாங்கம் பயணக் கட்டுப்பாடுகளை விதித்ததால் தான் ஜுனாகரில் சிக்கிக்கொண்டதாக அவர் கூறினார். மனத் உயிரோடிருக்கும் பட்சத்தில் பிப்ரவரி மாதம் தகனம் செய்யப்பட்ட சடலம் யாருடையது என்பதை கண்டறிய வேண்டியிருகக்கும். ஆகையால் மனத் மீண்டும் திரும்பி வந்தது போலீஸ் அதிகாரிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதேபோன்ற மற்றொரு சம்பவத்தில், உ.பி.யின் அம்ரோஹா (Amroha) மாவட்டத்தில் 20 வயது மகளை கொலை செய்ததாக ஒரு நபரும் அவரது இரண்டு மகன்களும் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர். ஏறக்குறைய 18 மாதங்களுக்குப் பிறகு, அப்பெண் தனது காதலனுடன் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

ALSO READ: இப்படி பாத்துட்டே இருந்த எப்டி?… சாப்பிட எதாவது போடுங்க… கரடியின் கியூட் வீடியோ!!

Source link

Space news rat came back as body builders from space journey | விண்வெளிப்பயணம் மேற்கொண்ட எலிகள் ‘பாடி பில்டர்களாக’ திரும்பின…!!!


சர்வதேச விண்வெளி நிலையத்தில் ( International space station)   பல மாதம் விண்வெளியில் கழித்த எலிகள், தங்களை தசைகளை வலுப்படுத்திக் கொண்டு திரும்பியுள்ளது என விஞ்ஞானிகள் கூறினார்.

விண்வெளி வீரர்கள் நீண்ட நாள் விண்வெளியில் கழிக்கும் போது அவர்கள் எலும்புகள் மற்றும் தசைகள் சேதமடைவதைத் தடுக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான சில எலிகளை விஞ்ஞானிகள் விண்வெளிக்கு அனுப்பபினர். 

இந்த ஆராய்ச்சி நீண்ட விண்வெளி பயணங்களின் போது  ஏற்படும் தசைகள் மற்றும் எலும்புகள் வலு இழப்பிலிருந்து விண்வெளி வீரர்களை பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 
மேலும் இந்த ஆய்வு கூட தசை மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் காரணமாக சக்கர நாற்காலிகளில் வாழ்க்கையை கழிப்பவர்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 

டாக்டர் சி-ஜின் லீ தலைமையில் கனெக்டிகட்டின் ஜாக்சன் ஆய்வகத்தின் ஆராய்ச்சி குழு இந்த பரிசோதனையை மேற்கொண்டது. இந்த ஆராய்ச்சிக்காக, கடந்த ஆண்டு டிசம்பரில் 40 இளம் பெண் கருப்பு எலிகள் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்டுகள் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன. இந்த தகவலை லீ தேசிய அறிவியல் அகாடமியின் செயல்முறைகளில் வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கையில் வழங்கினார்.

இந்த 40 எலிகளில், 24  எலிகளுக்கு மருந்து ஏதும் கொடுக்கப்படாமல் அனுப்பப்பட்டன, அவை திரும்பும்போது அவர்களின் தசை மற்றும் எலும்பு எடை 18 சதவீதம் வரை குறைந்திருந்தது. ஆனால் மருந்து கொடுக்கப்பட்ட அனுப்பப்பட்ட எலி, தசைகள் மேலும் வலுப்பெற்று பாடி பில்டர்களைப் போல் திரும்பி வந்துள்ளன. 

மருந்து கொடுக்கப்பட்ட எலிகள் எடை குறையவில்லை என்பதோடு, தசைகளும் வலுப்பெற்றுள்ளது. இந்த எலிகளின் தசைகள் அமெரிக்க விண்வெளி அமைப்பின் நாசா விண்வெளி மையத்தில் வைக்கப்பட்டுள்ள சக்திவாய்ந்த எலிகளின் தசைகளுடன் ஒப்பிடப்பட்டன.

ஸ்பேஸ்எக்ஸின் காப்ஸ்யூல்  மூலம் விண்வெளிக்கு அனுப்பபட்ட அனைத்து 40 எலிகளையும் பாதுகாப்பாக வந்து சேர்ந்தன. இந்த எலிகள் ஜனவரி மாதம் கலிபோர்னியா கடற்கரையில் பசிபிக் கடலில் பாராசூட் செய்யப்பட்டன. இந்த ஆராய்ச்சி எதிர்காலத்தில் விண்வெளி வீரர்களுக்கு ஒரு வரமாக இருக்கும்.

ALSO READ | அட…. இந்த பாட்டரில சார்ஜ் செஞ்சா அடுத்த 28,000 ஆண்டுகளுக்கு சார்ஜே செய்ய வேண்டாமா!!
 

Source link